Wednesday, December 21, 2016

ஜவுத்தால் கவசம்

சோவேன பெய்யும் மழையில்
நனைந்தபடி குப்பைகளில் தேடியபோது கிடைத்தது
ஜவுத்தால் கவர் தலை கவசம்
இனி அது தலைகாத்து கொள்ளும்
ஜுரம் பற்றிய கவலை இல்லை
எனபதை விட
இனி தேவையற்ற
டாக்டர் பீஸ் பற்றிய
சிந்தனைக்குள் போக வேண்டிய
அவசியமில்லை


Friday, December 2, 2016

அனாதை சமுகம்

I'm individual and I'm not dependant
என்கிற ஒரே வார்த்தையில்
இந்த இளைய சமுகம்
தன்னைதானே தனிமை படுத்திகொண்டு
அகந்தையில் அனாதை யாகிறது .


Thursday, December 1, 2016

Virtual World

உங்ககிட்ட கையில எவ்வளோ பணமிருக்கு ?
கைல ஒண்ணுமில்லை கார்டுல இருக்கு
உங்ககிட்ட கையில எவ்வளோ தங்கமிருக்கு ?
கைல ஒண்ணுமில்லை பங்குச்சந்தையில இருக்கு
மெய்நிகர் உலகத்தில்
காசையும் தங்கத்தையும் கண்ணால பார்த்ததே இல்ல
இப்படியும் ஒரு வாழ்வை நோக்கி
Binary உலகத்தில்
Codeடை decode செய்யும் வரை
Malware's அட்டாக் போடும் வரை
Hackers ஆட்டையை போடும் வரை


Monday, November 28, 2016

ABCD டு Emoji

குழந்தைகளுக்கு 👶 ABCDக்கு முன்பு Emojiகளை கற்று தர வேண்டிய கட்டாயத்தில் இன்றைய பெற்றோர்கள் .


Wednesday, November 23, 2016

Gender Honey Traps

ஆண்களுக்கான honey Trap பை பெண்களிடம் வைக்கலாம்.
அப்போ பெண்கள் ?
பெண்களுக்கான honey Trap பை அவர்கள் பேராசையிலே வைக்கலாம்


LowTech LocalTech

அய்யோ உங்க அளவுக்கு நான் Hightech லாம் கிடையாது ..
LowTech LocalTech தான் .


Saturday, November 19, 2016

கேப்பையும் பிசாவும் சட்டியில்

ஆப்பையால் கேப்பையை சட்டியில் சுரண்டி அள்ளுகிறவனிடம் Pizza தின்பவன் Cashless economyயை கட்டாயபடுத்துவது கஷ்டகாலம் தான்.
வாழ்க தேசம்
வாழ்க சகிப்புத்தன்மை


Friday, November 11, 2016

சூழல் பிச்சை

அன்று
பாத்திரம் அறிந்து பிச்சை இடு (வேறு அர்த்தம்)
இன்று
PAN card இருக்கா என்று பார்த்துவிட்டு பிச்சை இடு


Wednesday, October 19, 2016

ஒகே ஒகே

யாராக இருந்தாலும் ஒகே
என்று இருக்கும்போது தான்
யாருமே ஒகே ஆவதே இல்லை


Wednesday, October 12, 2016

Social மீடியா Genius

மீடியா fame கிடைச்சவங்க எல்லாம் Genius கிடையாது.
சாதாரண மக்கள் முட்டாளும் கிடையாது.
Social மீடியா எல்லோருக்குமானது


Tuesday, October 11, 2016

Gapபுல Game

ஒற்றுமையா இருக்கிறவங்களை
பிரிக்கிற சக்திகளுக்கா
இந்த உலகத்துல பஞ்சம்
கொஞ்ச Gap கிடைச்சா கூட
நல்லா Game ஆடிட்டு போய்டுவாங்க .


Sunday, October 9, 2016

பரிணாம வளர்ச்சி

Touch screen மொபைல் பயன்படுத்துற மூன்று வயது குழைந்தைக்கு Numer pad உள்ள செல்போனை பயன்படுத்த தெரியலை - பரிணாம வளர்ச்சி .


Saturday, October 1, 2016

வதந்திகளை நம்ப வேண்டாம்

எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா வதந்திகளை நம்ப வேண்டாம்ன்னு சொல்லிடனும்மாம்..
இப்பதான் போன் போட்டு இந்த இரகசியத்தை இரகசியமா சொன்னாங்க..


Sunday, September 18, 2016

ஈசியா கெத்தா

நான் easyயா user friendlyயா இருந்திருக்கவே கூடாது
Ruf and Tuffஅ கிட்ட நெருங்க விடாம கெத்தா இருந்திருக்கணும்
என்னைய மலைச்சிபோய் அசந்து பாக்க வேண்டியவ
என் கண்ணுல விரலை விட்டு ஆட்டிட்டு போய்ட்டா...!


Monday, September 12, 2016

Cafe காபி காதலன்

நான் சுவைத்திறாத போதும்
முதல்  Cappuccino வாங்கிகொடுத்து நண்பனை  அசத்தியதும்
முதல்  Espresso வாங்கிகொடுத்து தோழியிடம்  வாங்கிகட்டியதும்
ஒரு தனி அனுபவம் தான்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சுட சுட
சுவையான கும்பகோணம் degree காபி
அழகான Cappuccino
கசப்பான Espresso
இனிப்பான Caffè mocha

தழும்பும் நுரைகள்
கமழும் மணங்கள்
அட டா

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இன்னும் எத்தனையோ
காப்பி சுவைகள்
உலகமெங்கும்
நாம் சுவைக்க
காத்து கிடக்கிறது
கப் Sip என்று
சுவைத்து
ரசித்து
மகிழ்வோம்


Wednesday, August 31, 2016

ஹாய் bye

நீங்க  ஒரு  ஹாய் சொல்லலைன்னா கூட பரவால
அட்லிஸ்ட் ஒரு bye யாவது  வாய திறந்து  சொன்னா நல்லா  இருக்கும்
நீங்க மனிதன்மையுடன் சுய நினைவோடு தான்
இருக்கிறிங்கன்னு  நான்  புரிஞ்சிக்க
அது வழி வகுக்கும்



Monday, August 29, 2016

மிகா வெகு லி

அவள் கண்ணெதிரே நிற்கிறேன்
அதை உணராமல்
தலை குனிந்து
facebook வாட்’ஸ் app
last seenல்
என்னை
தேடிகொண்டிருக்கிறாள்

என் அன்பு
அறிவுக் கொழுந்து
செல்லக்குட்டி

Wednesday, August 24, 2016

தகுதி

எனக்கு என்ன தகுதி இருக்கிறது
என்று
என்னை நானே
degrade
செய்ய வேண்டியதில்லை

எனக்கு
எல்லா
தகுதியும் இருக்கிறது

அதை  புரிந்துகொள்ளும்
அறிவு தான்
அவர்களிடம்
இல்லை

என்று என்னை உற்ச்சாக படுத்திக்கொண்டு
பயணிக்கவே விருபுகிறேன்




Monday, August 22, 2016

யாரோ சோதிக்கிறான்

நாம் ஈகோவால் பேசாதபோது
நமக்கு உதவி செய்வதைப்போல் நடித்து
Game ஆடுகிறார்கள்
நமக்கு இடையே உள்ள Mediatorகளை களைய வேண்டும்
பிறகு ஈகோவை துறந்து
நாம் மீண்டும் இயல்பாக பேச வேண்டும்




Wednesday, August 3, 2016

லஞ்ச சிஸ்டம்

பிரசவம் பாக்குற வார்டுல இருந்து
பிணத்தை எரிக்கிற Grave yard வரைக்கும்
லஞ்சம் நிக்கமற நிறைந்து நிற்கிறது....

லஞ்சத்துக்குனே ஒரு system இருக்கு..
அதை எதிர்கொள்ளுற அளவுக்கு நம்மகிட்ட system இல்ல.


Sunday, July 24, 2016

தயங்கிய தலைமுறை

கல்யாணம்மாகி தனி குடித்தனம்  போனவங்க  எல்லாம்
குழந்தை  பிறந்தவுடன் DIAPER மாத்த பயந்துக்கிட்டு
அப்பா  அம்மாவை  மறுபடியும்  நாடுவார்கள்

SUPERVISING மட்டுமே பண்ண  தெரிந்த
இந்த  தலைமுறைக்கு
வேலை  செய்ய  வேண்டிய  கட்டாயம் வந்தால்
SUICIDE கூட  செய்ய  தயங்க  மாட்டார்கள்


Thursday, July 7, 2016

whats on your whats app

வெடி வெடித்திடும் போதும்
இடறாமல் அவ்விடம் கடப்பேன்ண்டி/கடந்துபோவேணடி
இன்று தடுமாறிபோகிறேன்
After checking out what's on your whats app status


Monday, July 4, 2016

பிகில் டகால்

சும்மா அப்பப்ப நம்ம
பிகில் உடுனும்
இல்லன்ன
நம்மல டகால்லாக்கிடுவாங்க......!

என்ன  நான் சொல்லுறது
ரைட்டா மாமு
வர்ட்டா


Thursday, June 30, 2016

நான் ஒரு option

அவளுக்கு நான் ஒரு option
அவளை  விட்டால் எனக்கு No other option

இதுதான் பெரும்பாலான காதல்களை
கருவறுக்கும் தருணம் .




Wednesday, June 29, 2016

லேசா புதுசா வெரசா

லேசா புதுசா வெரசா
நான் வரேன்
தினுசா நைசா ஜல்சா
நான் தரேன்


to be continued.....



Wednesday, June 22, 2016

Tamil to Tamizh back to Tamil

தமிழ் என்றால் ஆங்கிலத்தில் Tamil என்பார்கள்        (எழுதுவார்கள்)
ஆனால் தமிழர்கள் மட்டும் Tamizh என்கிறார்கள்      (எழுதுகிறார்கள்)

தக்காளி என்றால் ஆங்கிலத்தில் Tomato என்பார்கள்
ஆனால் தமிழர்கள் இதை ஆங்கிலத்தில் Takkali/Takkazh என்கிறார்களா என்ன ?

இல்லை

தக்காளி ஆங்கிலத்தில் Tomato ஆனதை போல    (எழுத படுவதை போல)

தமிழ் ஆங்கிலத்தில் Tamil என்றே ஆகும்                 ( எழுத படும் )

Tamizh ஆகாது                                                            ( எழுத கூடாது )

ஆகுமே ஆனால் அது ஆங்கிலம் ஆகாது 

அது Tanglish ஆகும்                                            ( Tamizh ஆங்கில எழுத்து அல்ல)
----------------------------------------------------------------------------------------------
[ தமிழ் is Tamil] Correct way of writing in English
[ தமிழ் is not Tamizh ] Wrong way of writing in English
[ Tamizh is Tanglish ] its not a English or a Tamil word (Not in any Dictionary )
[Tanglish is a mixture of English and Tamil languages ]

விளக்கம் given by
Krishna Kumar G


Tuesday, June 14, 2016

Gods Play

மத்தவங்க லைப்ல under play பண்ணா
Godu உங்க லைப்ல direct play பண்ணிடுவாரு


Saturday, June 11, 2016

கமிட்மென்ட் (Commitment) அண்ட் ப்ரயொரிட்டி (Priority)

ஒரு பொண்ணு  commit டான  உடனே
உன் கமிட்மென்ட் எல்லாத்தையும் மாத்தி
அவ கமிட்மென்ட்டை பிரதானமாக செய்து
அதையே உன் கமிட்மென்ட்டாக செய்ய வச்சிருவா..

அவளும் அவள் எண்ணங்களும் தான்
உனக்கு Priority யாக மாறணும்னு விரும்புவா...

நீ மீறி வேறு விசியங்களை Priority யாக பார்த்தால்
மூஞ்ச தூக்கி வச்சிகிட்டு இறுமாப்பாக இருப்பா..

வீட்டுல சோறு கிடைக்கிலைனா ஹோட்டல் போகுலாம்
பெட்ரூம் சுகம் கிடைக்கிலைனா பாவம் நீ எங்க போவ..

இந்த பாயிண்ட் அவ கையில எடுத்துகிட்டு
உன் பாயிண்ட்டை down ஆக்கிடுவா..

சுருக்கமா சொன்னா
காதல் கமிட் ஆச்சினா
உன் எதிர்கால எண்ணங்கள்
பொண்டாட்டி என்னும் control systemத்து கைல போய்டும்
so no personal commitment after marriage because its not possible


Saturday, May 28, 2016

காதல் போச்சினா

காதல் போச்சினா
கூடவே Fashion போய்டும்
லைப்ல புது Passion வந்துடும்
Its Time for new adventure


Friday, May 27, 2016

காதல் காது

Bankல Minimum Balanceசை maintain பண்ண  தெரியாத  உனக்கு
figure லாம்  செட் ஆகாது
செட் ஆனாலும்  maintain பண்ண முடியாது

பேங்க்குல  அமௌண்ட் லேதுன்னா
காதல் காது


Stretch Marks அழகு

அந்த இயற்க்கை/கடவுள் போட்ட அழகான Tattoo தான்
 உடலில் உள்ள Stretch Marks
அழகோ அழகு அது ஒரு தனித்துவமான அழகு


கரெக்ட்டுடமை

குறள் :
Single & Commited முயற்ச்சித்தால் கரெக்ட்டாகும் கரெக்ட்டாகாதே
Complicated பொண்ணு
:- 420 லவ்குறள்

உரை :
Single பொண்ணையும் கரெக்ட் பண்ணிடலாம்
Committed பொண்ணையும் கரெக்ட் பண்ணிடலாம்
Complicated பொண்ண மட்டும்  கரெக்ட் பண்ணவே  முடியாது


Wednesday, April 20, 2016

வெறும் பிணம்

வாழும் காலத்தில்
சாதியையும் மதத்தையும் பற்றி கொண்டவன்

 அவன்
செத்தால் வெறும் பிணம்
என்பதையும் தாண்டி
கல்லறையில் கூட
சாதியையும்  மதத்தையும்
புதைத்து வைத்திருக்கிறான்
இந்த சீர்கெட்ட மனிதன் .


Monday, April 18, 2016

நல்ல நேரம்

நாம் = ஒன்றாக = நல்ல நேரம் = பார்க்க வேண்டாம்
கேட்டு போனவர்களுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.


சீரிய காது

பொண்ணுங்க காது ரம்போ (ஷார்ப்)sharp

எப்புடித்தான் அந்த தொங்குற
Hand bagல
எங்கோ கிடக்கிற
செல்போன்
அடிக்கிற சத்தம்
அவங்க காதுக்கு மட்டும் தான்
கேட்கும்னு
தெரியல

(இதை உவமையாகவும் கொள்ளலாம்)



விவாகம் to விவகாரத்து

வரன் தேடி கிடைக்காததால்
விவாகம் செய்ய முடியாமல்
பல இளைஞர்கள்
சுற்றும் காலமும் இதுதான்

விவகாரத்தான
பல இளைய தலைமுறையினர்
மறுமணத்திற்க்காக
சுற்றித்திரியும் காலமும்  இதுதான்

வரனும் விவாகரத்தும்
மறுமணமும் விவாகமும்

Why can't you marry a divorcee or a widow person




Sunday, April 17, 2016

தேர்தல் தலைவன் தேர்வு

கொடி பிடிக்காதிங்க ,வாழ்கன்னு கோஷம் போடதிங்க,
போஸ்டர் ஓட்டதிங்க,பேனர் வைக்காதிங்கன்னு.
எவன்/எவ சொல்றாங்களோ
அவங்கதான் நல்ல தலைவர்.
அதை விட்டுட்டு கண்டவங்க பின்னாடி ஆதாயம் தேடி ஓடாதிங்க ,
அவமானம் தான் மிஞ்சும்.


Thursday, April 14, 2016

நூறு கிலோ

இன்று
எடை பாக்குற Machineனே
ஆடி போச்சி
நூறு கிலோவை
தொட்டுவிட்டேன்
பீலிங் Worried
அதுனாலே எடை கூடுகிறது


Wednesday, April 13, 2016

ஈ மொய்க்கும் தின்பண்ட கடை

அவள்                                       (அவன்) (Gay)
தன் இனிப்பான
தின்பண்ட கடையை
திறந்து வைத்துவிட்டு

ஆண்கள் எல்லாம்                 (பெண்கள் எல்லாம்)(Lesbian)
ஈ போல்
மொய்க்கிறார்கள்
என்று
குற்றம் சாட்டுகிறாள்

மூடிய தின்பண்டகளை
ஈக்கள் மொய்ப்பதில்லை.

Tuesday, April 12, 2016

கெட்டவன் நல்லவன்

நான் எவ்வளோவோதான் (எவ்வளவுதான்)
நல்லவனா நடிச்சாலும்
நான் என்னைக்குமே
கெட்டவன் தான்

நீங்க எவ்வளோவோதான் (எவ்வளவுதான்)
என்னை கெட்டவன்னு
நினைச்சாலும்
நான் என்னைக்குமே
நல்லவன்தான்

கெட்டவனாகிய நல்லவன்


சாம்பார் Couples

ஆரம்பத்தில்
அவளுக்கும் சாம்பார்
வைக்க தெரியாது
எனக்கும் சாம்பார்
வைக்க தெரியாது

அது அப்படியே
தொடர்ந்து 
இன்று வரை 
சம்பாராகவே 
இருக்கிறோம்

(No double meaning its pakka single meaning only)


Sunday, April 10, 2016

Offshoreல் கண்ட Onsite

Offshoreல் கிணற்றுத் தவளை போல்
கிடக்கிறார்கள்
Onsiteல் குடித்த குதிரை போல்
துள்ளுகிறார்கள்

பப்பிலும் டிஸ்கோவிலும் பார்த்த முகம் தானே
பார்க்காத செய்தி இவர்களிடம் என்ன இருக்கிறது

எங்கு இருந்துதான் வருகிறதோ இந்த உற்சாகம் Onsiteல்
அதில் மிதம் கூட இங்கே அவர்களிடம் காண்பது அறிது Offshoreல்

இவர்கள் எங்கு இருந்தாலும்
தன் மனம் மட்டும் கோணாமல் நடக்கிறார்கள்



Wednesday, April 6, 2016

Love இல்ல

நாங்க பண்றதுக்கு பேரு
Love இல்ல
அதுக்கும் மேல
மிக கேவலமான
செயல்
ஜவ்வு மாதுரி
இழுத்துகிட்டே போறோம்

தூ .......
இதுலாம் உருப்புடுற மாதுரி
தெரியல

இது
தேறாது

நீ அதுக்குலாம்
சரிபட்டு வரமாட்ட.

காதல்னா சொல்லணும்
காமம்னா கொள்ளனும்

இங்க சொல்லவும் இல்ல
கொள்ளவும் இல்ல
ஆகையால்
இது Loveவே இல்ல

(அதுக்கும் மேல)



Monday, April 4, 2016

U Turn Miss

Life என்னும் ரோட்டில்
ஒரு U Turnன Miss பண்ணிட்டா
அடுத்த  U Turn வரும் வரை
மனசு படும் பரிதவிப்புக்கு
எல்லையே இல்லை


Friday, April 1, 2016

Disturb பண்ணுற

நீ என்ன
disturb பண்ணுற 
disturb பண்ணுறன்னு
சொல்லி சொல்லி
அவ என்னை 
disturb பண்ணுனதுதான் அதிகம் 


லவ்வூ கவ்வு

மத்தவங்கள்ட்ட  எல்லாம் நல்லா தான்
பழகுறான் நம்மகிட்ட
வரும்போது மட்டும்
லவ்வூங்கிறான் கவ்வுங்கிறான்
சொல்லவந்ததையும் சரியா சொல்லாமல்
ஜவ்வு மாதிரி இழுக்குறான் ..!


தோற்றுவிட்டேன்

நான் எப்போதே உன்னிடம் தோற்றுவிட்டேன்
அது தெரிந்தும்
என்னை மீண்டும் அழைத்து
தோற்கடிப்பதில் இல்லை ஒரு நியாயம்
 உனக்கு அதில் ஏதோ ஒருவகை சுகம் போலும்


Black பையன் White பொண்ணு

Black Black  பையன்
White White பொண்ணு
Cross Cross கண்ணு

full song may be available in my Sound cloud page

நல்ல நண்பன்

நல்ல நண்பன்னா
உங்கள மாதுரி
பிரச்சனைன்னு வந்தால் அப்பிட்டாகிடனும்

கெட்ட நண்பன்னா
என்ன மாதுரி
பிரச்சனைன்னு வந்தால் கூட இருந்து Solve பண்ணனும்


களி அல்வா

யாரவது  அல்வா கொடுத்தா
பேசாம  வாங்கி சாப்புட்டு போய்டு
அத விட்டுட்டு
திரும்ப போய் நின்னனா
களி கிண்டி கூடுத்துடுவாங்க


Tuesday, March 29, 2016

குணம் நாடி

சொல்ல வந்த விசியத்தை
சுருக்கமா  தெளிவா  சொல்லிடனும்
சும்மா வள வள கோல கோலனு
இழுக்க கூடாது

தனக்கு தேவை என்றால் குழைவதும்
வேண்டாம் என்றால் புறம் தள்ளுவதும்
வேண்டா விருப்பு என்றால் கண்டும் காணாமல் செல்வதும்
மனித குணம்

எவ்வளவுதான் முதுகில் குத்தி இருந்தாலும்
அன்பாய் அரவணைப்பது தெய்வ குணம்.


Monday, March 28, 2016

நண்பன்

சந்தேகம் வருகிற பொழுது
என் நண்பர்களுக்கு
நான் தான் Google Search

வழி தேடுகிறபோது
என் நண்பர்களுக்கு
நான் தான் GPS

நீ இப்ப என்ன நினைகிறன்னு எனக்கு தெரியும்
........................



Wednesday, March 23, 2016

Achieve

நாம எதையும் Achieve
பண்ண போறதில்லை
அதுவரைக்கும் இருக்கிறதை
ஒழுங்கா பாத்துக்கோ
ஒருவேளை அப்படி  Achieve
பண்ண நேர்ந்தால் 
பிகு பண்ணாம அமைதியா இருந்துக்கோ