Sunday, October 29, 2017

Temple run

வாழ்க்கை ஒரு Temple run
பேய்கள் துரத்த
தடைகளை தாண்டி
பொருள்களை ஈட்டிக்கொண்டே ஓட
எதோ ஒரு திசையில் தடையில் மாட்டிக்கொள்கிறோம்..
😂😎


Wednesday, August 23, 2017

இணையதள கூத்து

Commentகளில்
பெண் என்கிற ஒரே காரணத்திற்காக WOW Awesome SUPER என்பார்கள்
ஆண் என்கிற ஒரே காரணத்திற்காக லைக் கூட போடாமல் புறக்கணிப்பார்கள்

ஆண் CELEBRITY என்றால் விழும் பாராட்டு கொட்டு
சண்டைகள் இடுவார்கள்
பெண் CELEBRITY என்றால் விழும் ஆபாச திட்டு
கேலி கிண்டல் செய்வார்கள்

இணையதள கூத்தில்
வினோத வாசிகள் 
'இணையதள யாசிகள்'


Wednesday, July 5, 2017

மகிழ்விக்க வருகிறேன்

காலையிலே 18 போன் கால் 36 வேலைகள்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
தூங்கு என்கிறது பிறரை மகிழ்விக்க
சோம்பல் முறிக்கிறேன்...
இதோ வருகிறேன்.

கரெக்டான பாயிண்ட்

கரெக்டான பாயிண்ட்டை பிடிச்சிட்டோம்னா,
உனக்கென்ன தெரியும்
நீ ஒரு முட்டாள் என்று
சொல்லிவிட்டு ஓடிவிடுவார்கள்
😊😊😁😁🤔
சுபா வம்

Saturday, July 1, 2017

Discovery Big Boss

Discovery தமிழில்
Naked and Afraid பாக்குற பசங்க தான்
Big Boss கட்டிப்பிடி பற்றி
தவறாக விவாதிப்பவர்கள்


Friday, June 30, 2017

சீரியல் விதிகள்

ஒரு வசனம் பேசி முடித்ததும்
நான்கு நபர்களின் முகத்தை
close-upயில் காட்டவேண்டும்.
ஒரே மாதிரியான சீரியஸ்சான மியூசிக்யுடன்
சின்ன திரை சீரியல் விதிகள்.


Thursday, June 29, 2017

டேட்டிங் சைட்

Okcupid முதல் Tinder வரை பாத்தாச்சு
இவை எல்லாத்தையும் விட
சிறந்த டேட்டிங் சைட்
facebook தான்.

Wednesday, June 28, 2017

வீடியோசனா

கண் விழித்தப்படி
முகநூல் வீடியோக்களை பார்த்தபடி
தியான நிலையில் இருக்கிறேன்.
(வீடியோசனா)

Sunday, June 25, 2017

நவீன பொய்கள்

ஒருவேளை நாம் சொல்லும் செய்தி
பொய் என்றால்
அதை சொல்லும்போதே
இது இணையத்தில்
வாட்ஸ் ஆப்பில் வந்தது என்று
சேர்த்து சொல்லி விட வேண்டும்


Saturday, June 17, 2017

லிங்குகள் ஆதாரமா ?

அவன் நல்லவன்/கேட்டவன்
அது நடந்தது/நடக்கவில்லை
என இணையத்தில் ஆதார லிங்குகள் கோடி
அதில் என் மனம் லிங்க்காகாமல் போனதெனடி...?


Friday, June 16, 2017

Fake Relationship statuses

Fake profileக்கு கூட
Relationship status
பாக்க வேண்டி இருக்கு...!



MEME'S Pronunciation

MEME'S
மீமீஸ்,
மீமேஸ்,
மீம்ஸ்,👍
Now how it became
மாமிஸ்
IDK

Fake Profile Pages

8 லட்சத்தி 80 ஆயிரம் பேர்
Follow பண்ணுற fb பக்கதுடைய
Admin யாருன்னு கஷ்ட்டப்பட்டு கண்டுபிடிச்சா
அது ஒரு Fake Profile
நடிகை சாய் பல்லவி Profile புகைப்படத்துடன்..!
மிரட்டுகிறது (மிரட்டுகிறான்)

Breaking News

Studioவில் ஒருவன்
வீதியில் ஒருவன்
மொட்டை மாடியில் ஒருத்தி
கையில் மைக்குடன்,
அகல பாதாளத்தில்
ஒரு கோழி குஞ்சு
Breaking News



Thursday, June 15, 2017

முட்டும் லைக்ஸ்


கண்டதை படிச்சி கஷ்ட்டப்பட்டு
 தலையை முட்டிக்கிட்டு எழுதினா
ஒரு லைக்கும் விழாது
எதையும் முட்டாம எழுதினா
முட்டுற அளவுக்கு லைக்ஸ் விழுது
லைக்கால் முட்டும் விநோதங்கள் !

Tuesday, May 16, 2017

காபி Miss u

காபி காதலி
எங்கே ?
காபி ஆறுகிறது..
We Miss u...!



Friday, January 27, 2017

Copy Paste Share To

Copy Paste என்றொரு மகத்தான கலாச்சாரத்தை நாம் இழந்து
Share To கலாச்சாரத்தில் பயணிக்கிறோம்,
இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை .
முன்பைவிட வேலை குறைவு அவ்வளவே


Tuesday, January 3, 2017

ஜவுளிக்கடை கோட்பாடுகள்

ஜாக்கெட் என்றால் ஆபாசம்
பிளவுஸ் என்றால் நாகரிகம்
ரவிக்கை என்றால் அசிங்கம்
(மனதளவில்) வெட்கத்தால் விளைந்த
ஜவுளிக்கடை கோட்பாடுகள்

------------------------------------------------------------------------
பாடி/Bra (ப்ரா) என்றால் ஆபாசம்
நாயுடு ஹால் என்றால் நாகரிகம்
மார்புக் கச்சு என்றால் தெரியாது
யாருக்கும் புரியாது

-----------------------------------------------------------------------------

பாவாடை என்றால் ஆபாசம்
ஸ்கேர்ட் என்றால் நாகரிகம்
பெட்டி கோட் என்றால் நவ நாகரிகம்

-----------------------------------------------------------------------------

நிஜங்களை தொலைத்தாய்
எத்தனை நிறங்களடி
என்றும் நீ புதுமையடி