Tuesday, January 3, 2017

ஜவுளிக்கடை கோட்பாடுகள்

ஜாக்கெட் என்றால் ஆபாசம்
பிளவுஸ் என்றால் நாகரிகம்
ரவிக்கை என்றால் அசிங்கம்
(மனதளவில்) வெட்கத்தால் விளைந்த
ஜவுளிக்கடை கோட்பாடுகள்

------------------------------------------------------------------------
பாடி/Bra (ப்ரா) என்றால் ஆபாசம்
நாயுடு ஹால் என்றால் நாகரிகம்
மார்புக் கச்சு என்றால் தெரியாது
யாருக்கும் புரியாது

-----------------------------------------------------------------------------

பாவாடை என்றால் ஆபாசம்
ஸ்கேர்ட் என்றால் நாகரிகம்
பெட்டி கோட் என்றால் நவ நாகரிகம்

-----------------------------------------------------------------------------

நிஜங்களை தொலைத்தாய்
எத்தனை நிறங்களடி
என்றும் நீ புதுமையடி