Friday, June 30, 2017

சீரியல் விதிகள்

ஒரு வசனம் பேசி முடித்ததும்
நான்கு நபர்களின் முகத்தை
close-upயில் காட்டவேண்டும்.
ஒரே மாதிரியான சீரியஸ்சான மியூசிக்யுடன்
சின்ன திரை சீரியல் விதிகள்.


Thursday, June 29, 2017

டேட்டிங் சைட்

Okcupid முதல் Tinder வரை பாத்தாச்சு
இவை எல்லாத்தையும் விட
சிறந்த டேட்டிங் சைட்
facebook தான்.

Wednesday, June 28, 2017

வீடியோசனா

கண் விழித்தப்படி
முகநூல் வீடியோக்களை பார்த்தபடி
தியான நிலையில் இருக்கிறேன்.
(வீடியோசனா)

Sunday, June 25, 2017

நவீன பொய்கள்

ஒருவேளை நாம் சொல்லும் செய்தி
பொய் என்றால்
அதை சொல்லும்போதே
இது இணையத்தில்
வாட்ஸ் ஆப்பில் வந்தது என்று
சேர்த்து சொல்லி விட வேண்டும்


Saturday, June 17, 2017

லிங்குகள் ஆதாரமா ?

அவன் நல்லவன்/கேட்டவன்
அது நடந்தது/நடக்கவில்லை
என இணையத்தில் ஆதார லிங்குகள் கோடி
அதில் என் மனம் லிங்க்காகாமல் போனதெனடி...?


Friday, June 16, 2017

Fake Relationship statuses

Fake profileக்கு கூட
Relationship status
பாக்க வேண்டி இருக்கு...!



MEME'S Pronunciation

MEME'S
மீமீஸ்,
மீமேஸ்,
மீம்ஸ்,👍
Now how it became
மாமிஸ்
IDK

Fake Profile Pages

8 லட்சத்தி 80 ஆயிரம் பேர்
Follow பண்ணுற fb பக்கதுடைய
Admin யாருன்னு கஷ்ட்டப்பட்டு கண்டுபிடிச்சா
அது ஒரு Fake Profile
நடிகை சாய் பல்லவி Profile புகைப்படத்துடன்..!
மிரட்டுகிறது (மிரட்டுகிறான்)

Breaking News

Studioவில் ஒருவன்
வீதியில் ஒருவன்
மொட்டை மாடியில் ஒருத்தி
கையில் மைக்குடன்,
அகல பாதாளத்தில்
ஒரு கோழி குஞ்சு
Breaking News



Thursday, June 15, 2017

முட்டும் லைக்ஸ்


கண்டதை படிச்சி கஷ்ட்டப்பட்டு
 தலையை முட்டிக்கிட்டு எழுதினா
ஒரு லைக்கும் விழாது
எதையும் முட்டாம எழுதினா
முட்டுற அளவுக்கு லைக்ஸ் விழுது
லைக்கால் முட்டும் விநோதங்கள் !