Wednesday, December 21, 2016

ஜவுத்தால் கவசம்

சோவேன பெய்யும் மழையில்
நனைந்தபடி குப்பைகளில் தேடியபோது கிடைத்தது
ஜவுத்தால் கவர் தலை கவசம்
இனி அது தலைகாத்து கொள்ளும்
ஜுரம் பற்றிய கவலை இல்லை
எனபதை விட
இனி தேவையற்ற
டாக்டர் பீஸ் பற்றிய
சிந்தனைக்குள் போக வேண்டிய
அவசியமில்லை


Friday, December 2, 2016

அனாதை சமுகம்

I'm individual and I'm not dependant
என்கிற ஒரே வார்த்தையில்
இந்த இளைய சமுகம்
தன்னைதானே தனிமை படுத்திகொண்டு
அகந்தையில் அனாதை யாகிறது .


Thursday, December 1, 2016

Virtual World

உங்ககிட்ட கையில எவ்வளோ பணமிருக்கு ?
கைல ஒண்ணுமில்லை கார்டுல இருக்கு
உங்ககிட்ட கையில எவ்வளோ தங்கமிருக்கு ?
கைல ஒண்ணுமில்லை பங்குச்சந்தையில இருக்கு
மெய்நிகர் உலகத்தில்
காசையும் தங்கத்தையும் கண்ணால பார்த்ததே இல்ல
இப்படியும் ஒரு வாழ்வை நோக்கி
Binary உலகத்தில்
Codeடை decode செய்யும் வரை
Malware's அட்டாக் போடும் வரை
Hackers ஆட்டையை போடும் வரை